Latestமலேசியா

சாகில்-ஜெமந்தாவில் கார்-SUV மோதல்; 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்

தங்காக், ஜனவரி-25, ஜோகூர், தங்காக், கூனோங் லேடாங் தோட்டமருகே சாகில்-ஜெமந்தா சாலையில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் ஐவர் படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு மணி 9.40 அளவில் நிகழ்ந்த விபத்தில் ஒரு காரும் SUV வாகனமும் மோதிக் கொண்டன.

மரணமடைந்த இருவரும் காரில் பயணம் செய்த 56 வயது ஆடவர்கள் ஆவர்.

காயமடைந்த ஐவரில் இருவர் அக்காரிலிருந்தவர்கள்; எஞ்சிய மூவர் SUV வாகனத்தில் பயணம் செய்தவர்கள்.

ஐவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கானக் காரணம் இன்னும் தெரிய வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!