
கோலாலம்பூர் , மே 7 – 2016 ஆம் ஆண்டு முதல் சாலை சமிக்ஞை விளக்குகள் மற்றம் சாலை விளைக்குகளை பொருத்தும் திட்டத்தின் குத்தகை நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவன உரிமையாளர் மற்றும் பினாங்கைச் சேர்ந்த நகரான்மைக் கழகம் ஒன்றில் பணியாற்றிவந்த இரண்டு அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் MACC கைது செய்துள்ளது.
மே மாதம் 9 ஆம் தேதி வரை அந்த இரண்டு அரசு ஊழியர்களையும் தடுத்து வைப்பதற்கு ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பதிவதிகாரி முகமட் அஷாம் முகமட் இசோப் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் நிறுவன உரிமையாளரும் இன்றுவரை இரண்டு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த இரண்டு அரசு ஊழியர்களில் ஒருவர் ஆடவர் என்பதோடு மற்றாருவர் பெண் ஆவார். நிறுவன உரிமையாளர் 30 முதல் 40 வயதுடைய ஆடவர் என்பதோடு திங்கட்கிழமையன்று நண்பகல் 1 மணி முதல் மாலை நான்கு மணிவரை பினாங்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என Macc க்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நிறுவனத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசோதிக்காமல் இருப்பதற்கு 2016ஆம் ஆண்டு முதல் அந்த இரண்டு அரசு ஊழியர்களும் 3,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட்வரை லஞ்சம் வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் கைதுசெய்யப்பட்டதோடு 2009ஆம்ஆண்டின் MACC சட்டத்தின் 16ஆவது பிரிவின் (b) (B) யின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக MACC யின் வேவுப் பிரிவின் இயக்குனர் டத்தோ இட்ரிஸ் ஷஹாருடின் உறுதிப்படுத்தினார்.