Latestமலேசியா

சாஹிட் ஹமிடியின் DNAA விடுதலையை எதிர்த்து வழக்கு; கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடிச் செய்தது

கோலாலம்பூர், ஜூன்-27 – 47 ஊழல் குற்றச்சாட்டுகளில்  இருந்து துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி (Datuk Seri Ahmad Zahid Hamidi) விடுதலை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டதை (DNAA) எதிர்த்து செய்த வழக்கில், மலேசிய வழக்கறிஞர் மன்றம் தோல்விக் கண்டுள்ளது.

வழக்கறிஞர் மன்றத்தின் மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடிச் செய்தது.

சாஹிட் மீதான வழக்கு விசாரணையை பாதியிலேயே நிறுத்த தேசிய சட்டத் துறைத் தலைவர் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி, கடந்தாண்டு டிசம்பர் 2-ஆம் தேதி வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தது.

சட்டத்துறைத் தலைவரின் அம்முடிவு, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி எடுக்கப்பட்ட நியாயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு என அறிவிக்குமாறும் அம்மன்றம் கோரியிருந்தது.

எனினும் அதனை விசாரித்த நீதிபதி டத்தோ அமர்ஜீட் சிங் (Datuk Amerjeet Singh), அவ்விவகாரத்தை நீடிமன்றம் முடிவு செய்ய இயலாது என்றார்.

அதோடு, சட்டத்துறைத் தலைவரின் முடிவை சீராய்வு செய்யக் கோரும் இடத்தில் வழக்கறிஞர் மன்றமும் இல்லை என சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து வழக்கறிஞர் மன்றம், சட்டத்துறைத் தலைவருக்கு செலவுத்தொகையாக 10,000 ரிங்கிட்டை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

யாயாசான் ஆக்கால்புடி (Yayasan Akalbudi) அறக்கட்டளையை உட்படுத்திய அந்த 47 குற்றச்சாட்டுகளில் இருந்தும் சாஹிட் கடந்தாண்டு செப்டம்பரில் உயர்நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!