
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – அண்மையில் செனாவாங்கிலுள்ள வீட்டின் முன்புறத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
28 வயதான பாதிக்கப்பட்டவர், ஒரு மாதத்திற்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் சந்தேக நபரின் மனைவியுடன் பழகத் தொடங்கியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதென்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாஃபிர் யூசோஃப் (Ahmad Dzaffir Yussof) தெரிவுத்துள்ளார்.
இதனை அறிந்த சந்தேக நபர் கடும் கோபமடைந்து பாதிக்கப்பட்டவரை மார்பில் குத்தி உயிரிழக்கச் செய்துள்ளார்.
மேலும் சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும் முந்தைய குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.