Latestமலேசியா

சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை

ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

பேருந்து நிலையங்கள், சந்தைகள், பெட்டாலிங் ஜெயாவின் Mentari Court போன்று அவர்கள் அதிகம் கூடும் இடங்களும் அவற்றிலடங்கும்.

குறிப்பாகச் சொன்னால்…போர்ட் கிள்ளான், கிள்ளான் பேருந்து முனையம், GM கிள்ளான், ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூடா சந்தை, செலாயாங் மொத்தச் சந்தை உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த நோன்புப் பெருநாள் விழாக் காலத்தில் பொது அமைதியை உறுதிச் செய்யவும் குடிநுழைவுச் சட்டங்கள் பின்பற்றப்படுவதையும் உறுதிச் செய்வதையும் இந்நடவடிக்கை நோக்கமாகக் கொண்டதாக, சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Khairul Aminus Kamaruddin கூறினார்.

இந்த Ops Omnipresence சோதனையில் 16 அதிகாரிகள் களமிறங்கினர்.

கண்காணிப்பு நடவடிக்கைகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை வலுப்படுத்த, இந்த நேரடி அமுலாக்கங்கள் தொடருமென Khairul கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!