Latestமலேசியா

சிலாங்கூரிலும், கோலாலம்பூரிலும் இன்று நீர் விநியோகத்தில் தடை ஏற்படும்

கோலாலம்பூர், ஜூலை 23 – Sungai Kundang மற்றும் Sungai Sembah ஆறுகளில் துர்நாற்ற தூய்மைக்கேடு சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்தகரிப்பு மையங்களின் நடவடிக்கை நிறுத்தப்படும் என Air Selangor எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக சென்.பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Rantau Panjang நீர் சுத்திகரிப்பு, Sungai Selangor முதல் கட்ட சுத்திகரிப்பு நிலையம் , Sungai Selangor 2 ஆவ கட்ட சுத்திகரிப்பு மையம் மற்றும் Sungai Selangor 3ஆவது நீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றின் நடவடிக்கை நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், ஷா அலாம், கோம்பாக்,கோலாலம்பூர், உலு சிலாங்கூர், மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகம் தடைப்படும் என Air Selangor அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என Selangor Air நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் பயனீட்டாளர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் Air Selangor தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேல் விவரங்களுக்கு Air Selangor, Facebook, Instagram மற்றும் X தளத்தில் Air Selangor ருடன் தொடர்பு கொள்ளலாம். 15300 என்ற எண்கள் அல்லது https://www.airselangor.com/ மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!