Latestஉலகம்

சீனாவின் ஹுனானில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 21 பேர் மரணம்

ஹங்காங், மே-5- சீனாவின் ஹுனான் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து , அதிபர் ஷி ஜின்பிங் முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் ஹுனானின் தலைநகரான சாங்ஷாவில், ( Changsha ) திங்கள்கிழமை மாலை மணி 4.40 அளவில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக சிசிடிவி மற்றும் சின்ஹுவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன இணையதளங்களில் வெளியான காணொளிகளில், ஒரு பெரிய இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதும், இடிந்து விழுந்த கட்டிடங்களும், அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கும் குப்பைகளும் காணப்பட்டன.

சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!