Latestமலேசியா

சீனாவில், கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதிக்கும், 12 வயது சிறுமி

பெய்ஜிங், மார்ச் 19 – சீனாவில், 12 வயது சிறுமி ஒருவர், “ஆன்லைன்” வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், பிரபலமாகி இருக்கும் அச்சிறுமியின் சமூக ஊடகத்தை, இதுவரை 29 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

கு எனும் அச்சிறுமி, கையில் “மார்க்கர்” பேனாவுடன், வெள்ளை பலகையின் முன் நின்று போதிக்கும் காட்சி ஒன்று அவரது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு, ஜியோமட்ரி எனப்படும் வடிவவியலில் இருந்து செயல்பாடுகள், கால்குலஸ் வரை பல்வேறு கணித சிக்கல்களை அவர் விளக்கும் காட்சிகள் அந்த பதிவில் இடம் பெற்றுள்ளன.

கடந்த டிசம்பரில், மிகவும் சிக்கலான, பல்கலைக்கழக அளவிலான கணித பிரச்சினைக்கு தீர்வு காண உதவியதால் கு பாராட்டுகளை பெற்றார்.

சிறு வயதிலேயே, கணித பாடத்தின் மீது குவிற்கு இருந்த ஆர்வம், திறனை மேம்படுத்திக் கொள்ள அவருக்கு உந்துதலாக அமைந்தது.

அதனால், கணிதம் தொடர்பான சிக்கல்களுக்கு சொந்தமாக தீர்வுக் காணும் காணொளிகளை வெளியிட்டு வந்ததால், அவர் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.

தற்சமயம் ஆரம்ப பள்ளியில் பயின்று வரும் கு, விரைவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக கணித போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!