Latestஉலகம்

சுகாதாரப் பராமரிப்பு கேள்விக் குறி: இலங்கையில் அனைத்து மெக்னோடல் உணவகக் கிளைகளையும் மூட உத்தரவு

கொழும்பு, மார்ச் 25 – அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் செயல்படுவதாக வெடித்த பிரச்னையை அடுத்து, இலங்கை முழுவதும் உள்ள தனது அனைத்து கிளைகளையும் மெக்டோனல் நிறுவனம் ஞாயிற்றுக் கிழமை மூடியது.

சுத்த பராமரிப்பில் அனைத்துலக தர நிர்ணயத்தைப் பூர்த்திச் செய்யத் தவறியதாக உள்ளூர் franchise நிறுவனத்தை மெக்டோனல் குற்றம் சாட்டியதை அடுத்து, விசாரணைகளுக்கு வழி விட்டு ஏப்ரல் 4-காம் தேதி வரை அனைத்துக் கிளை உணவகங்களையும் மூட கொழும்பு வர்த்தக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இலங்கையில் மெக்டோனல் நிறுவனத்தை நடத்தும் franchise உரிமைப் பெற்ற நிறுவனமான அபான்சுடன் போட்ட ஒப்பந்தத்தையும், அது கடந்த வாரமே ரத்துச் செய்தும் விட்டது.

நீதிமன்றத்தின் அவ்வுத்தரவு குறித்து மெக்டோனல் தரப்பில் இருந்தோ அல்லது அபான்ஸ் தரப்பிடம் இருந்தோ உடனடி அறிக்கை எதுவும் வெளிவரவில்லை.

1998-ஆம் ஆண்டு இலங்கையில் மெக்டோனல் தனது கிளையைத் திறந்ததில் இருந்து, அங்கு 12 துரித உணவகங்களை அபான்ஸ் நிறுவனம் franchise முறையில் நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!