Latestமலேசியா

சுக்மா சீலாட் வீரரின் மரணத்துக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவே காரணம்

சிரம்பான், மார்ச்-4, நெகிரி செம்பிலானில், சுக்மா போட்டிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற போட்டியின் போது திரங்கானு சீலாட் வீரர் வான் முஹமட் ஹைக்கால் வான் ஹுசின் மரணமடைந்ததற்கு, மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவே காரணம்.

அவரது மரணத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லை என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP முஹமட் ஹத்தா ச்சே டின் உறுதிப்படுத்தினார்.

“போட்டியின் போது எதிராளியின் கால் தவறுதலாக ஹைக்காலின் கழுத்தில் பட்டிருக்கலாம்” என்றார் அவர்.

எனவே அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

என்றாலும், வழக்கமான நடைமுறையாக, ஹக்காலை எதிர்த்து போட்டியிட்டவரும், போட்டி ஏற்பாட்டாளர்களும் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர் என ACP ஹத்தா சொன்னார்.

தாமான் கோரல் ஹெயிட் சமூக மண்டபத்தில் நடைபெற்ற போட்டியின் போது, எதிர் வீரர் பலங்கொண்டு எத்தியதில் படுகாயம் அடைந்த 21 வயது ஹைக்கால் அங்கேயே மயங்கி விழுந்து மூர்ச்சையானார்.

அதிகாலை 1.20 மணிக்கு அவரின் உயிர் பிரிந்ததை தூவாங்கு ஜஃபார் மருத்துவமனை
உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!