Latestமலேசியா

சுக்மா சீலாட் வீரர் வான் முகமட் ஹைக்கால் மரணம்

சிரம்பான், மார்ச் 3 – சுக்மா மலேசிய விளையாட்டுப் போட்டியில் திரெங்கானுவை பிரதிநிதித்த சீலாட் தற்காப்பு கலை வீரர் Wan Muhammad Haikal Wan Hussin சிரம்பான், Taman Coral Height சமூக மண்டபத்தில் நடைபெற்ற போட்டியின்போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடைந்தார். 21 வயதுடைய Wan Muhammad Haikal நேற்று அவருடன் மோதிய மற்றொரு சீலாட் வீரர் உதைத்த பின் மயக்கம் அடைந்ததோடு சுயநினைவு இழந்தார். சிரம்பான் Tuanku Jaafar மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அதிகாலை மணி 1.20 அளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 5.30அளவில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக Wan Muhammad Haikal லின் மூத்த சகோதரி Wan Nor Haslinda தெரிவித்தார். அவருடன் மோதிய போட்டியாளர் உதைத்ததால் மயக்கம் அடைந்ததோடு Wan Muhammad சுயநினைவை இழந்ததாக பயிற்சியாளர் எங்களது பெற்றோரிடம் தொடர்புகொண்டு தெரிவித்தாக அவர் கூறினார்.

எனினும் இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அதிகாலை மணி 2.30அளவில் Wan Muhammad Haikal இறந்தார் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக Wan Nor Haslinda தெரிவித்தார். ஐவர் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையான Wan Muhammad Haikal Sukma வுக்கு முந்தைய போட்டிக்காக வெள்ளிக்கிழமை முதல் சிரம்பானில் இருந்து வந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!