Latestமலேசியா

சுங்கை சிப்புட்டில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த புலி பிடிபட்டது

கோலாலம்பூர், ஜூலை 3 – பேராவில் ஜலோங் (Jalong), சுங்கை சிப்புட் ஆகிய இடங்களில் ஜூன் மாத தொடக்கம் முதல் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஆண் புலி இன்று பிடிபட்டது. சுங்கை சிப்புட்டில் , ஜாலோங், Ladang Santani- யில் Perhilitan எனப்படும் தீபகற்ப மலேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காத்துறை பணியாளர்களால் வைக்கப்பட்ட பொறியில் அந்த புலி வெற்றிகரமாக சிக்கியது. இன்று நண்பகல் மணி 1.30 அளவில் அந்த புலி சிக்கியது குறித்து சுங்கை சிப்புட் மாவட்ட வனவிலங்கு பூங்காத் துறைக்கு தகவல் கிடைத்ததாக அதன் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.

கடந்த ஜூன் 9 ஆம் Ladang Santani- யில் மூன்று ஆடுகள் மற்றும் குடியிருப்பாளரின் செல்ல நாய் மீது புலி தாக்குதல் நடத்தியதாக குடியிருப்பாளரிடமிருந்து புகாரைப் பெற்றதாகவும் அதனை தொடர்ந்து அந்த புலியை பிடிப்பதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்துல் காடிர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!