Latestமலேசியா

சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?

சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டாள்.

இதையடுத்து சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து வந்த குழுவினர் பரிசோதித்ததில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

பிறகு சவப்பரிசோதனைக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை மூவரிடம் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் தலைவர் கூறினார்.

சித்ரவதை, அலட்சியம், மற்றும் மனதளவிலோ அல்லது உடல் அளவிலோ காயம் ஏற்படும் அளவுக்கு கைவிடப்பட்டது ஆகிய கோணங்களில், 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!