Latestமலேசியா

சுங்கை பூலோ கம்போங் பூங்கா ராயாவின் 36 குடும்பங்களுக்கு ரி.ம 42,000 Selangorku வீடுகள்!

ஷா அலாம் , மார்ச் 8- சுங்கை பூலோ கம்போங் புங்கா ராயாவில் உள்ள மொத்தம் 36 குடும்பங்கள் Rumah Selangorku வீடுகளுக்கான கடிதங்களை பெறுவார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் V.Papparaidu தெரிவித்தார்.
Alam Perdana, Puncak Alam என்ற இடத்தில் RM42,000 மதிப்புள்ள வீடுகள் வழங்கப்படும் என அவர் கூறினார். இதன்வழி கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளின் நெருக்கடிக்கு மாநில அரசாங்கம் தீர்வு கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“நாங்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தினோம். சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் சிலாங்கூர் சொத்துடமை வீடமைப்பு வாரியம் (LPHS) மூலம் மொத்தம் 36 குடும்பங்கள் Rumah Selangorku வீடமைப்பு திட்டத்திற்கு மனுச் செய்தனர். திவால் ஆகாமல் இருப்பது, கடன் ஒப்புதல் பெறுவது போன்ற பல அம்சங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என Papparaidu கூறினார். பெற்றோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் பிள்ளைகள் இந்த வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.எனவே, விண்ணப்பம் செய்யாத குடும்பங்கள் அல்லது வாரிசுகள் உடனடியாக பதிவு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

விஸ்மா நெகிரி சிலாங்கூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, Rumah SelangorKu சலுகைக் கடிதம் கோத்தா டமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் Muhammad Izuan Kasim,” மூலம் வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. நிதி விவகாரத்திற்கு தீர்வு கண்ட பின் அதில் மக்கள் குடியேறலாம் என இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடமைப்புத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Borhan Aman தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!