Latestஉலகம்

சுடப்பட்ட சுலோவேக்கிய பிரதமர் கவலைக்கிடமாக இருக்கிறார்

பராக், மே 16 -பராக் , மே 16 – Slovakia பிரதமர் Robert Fico நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில், Figo 5 முறை சுடப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவர் ஹெலிகாப்டர் மூலம் Banska Bystica நகரத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக Slovakia வின் துணைப்பிரதமர் Thomas Taraba பி.பி.சியிடம் தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான கொலை முயற்சி அரசியல் நோக்கத்தை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் தலைநகரிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள Handlove நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியே தமது ஆதரவாளர்களை Figo சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் வயிற்றில் காயத்திற்கு உள்ளானதாக Slovakia தொலைக்காட்சி நிலையம் தகவல் வெளியிட்டது. இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் . முக்கியமான ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக அவருக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!