Latestமலேசியா

சுட்டெரிக்கும் வெயில்; உடல் உபாதை தொடர்பில் 15 சம்பவங்கள்; 1 குழந்தை உயிரிழப்பு – சுகாதாரா அமைச்சு

புத்ராஜெயா, மார்ச்-23-நாட்டில் வெயில் தொடர்ந்து சுட்டெரிக்கும் நிலையில், இவ்வாண்டு வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப சோர்வு மற்றும் வெப்பக்காய்ச்சல் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

எனவே பொது மக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் சுகாதாரா அமைச்சான KKM அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவுள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் தொடர்ந்து நிலவும் நிலையில், அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

நீடிக்கும் தலைசுற்றல், தீராத தாகம், அதிகரிக்கும் உடல் வெப்பநிலை போன்றவை வெப்ப வாதத்திற்கான ஆரம்ப அறிகுறி என்பதையும் KKM நினைவூட்டியது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!