
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31,
சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS வளாகத்தில் சோதனையின் போது எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
அவ்வாடவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல என்றும், மலேசியாவுக்கு வருவதற்கான சரியான காரணம் அவர்களிடம் இல்லையென்றும் கண்டறியப்பட்டது.
எனினும், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்களிடம் சோதனையின் போது எந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் அவர்கள் வந்த அதே வழியாக சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நடவடிக்கை, நாட்டின் நுழைவாயில்கள் பாதுகாப்பாகவும் சட்டப்படி கட்டுப்பாட்டில் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக AKPS தெரிவித்தது.



