Latestமலேசியா

சூதாட்ட நிலையத்தின் தொழில் அதிபரும் மலேசியாவின் 7 ஆவது பணக்காரருமான டாக்டர் Chen Lip Keong காலமானார்

கோலாலம்பூர், டிச 11 – சூதாட்ட நிலையத்தின் தொழில் அதிபரும் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ள மலேசியாவின் 7ஆவது பணக்காரருமான டாக்டர் சென் லிப் கியோங் (Chen Lip Keong) காலமானார். 75 வயதான டாக்டர் சென், ஹாங்காங் பங்கு பரிவர்த்தனையின் இடம்பெற்றுள்ள நாகாகார்ப் (NagaCorp Ltd) நிறுவனத்தை தோற்றுவித்தரும் ஆவார். நாகாகார்ப் நிறுவனத்தின் மூத்த தலைமை செயல்முறை அதிகாரியாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வந்த அவர் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவில் மரணம் அடைந்தததாக நன்யாங் சியாங் பாவ் (Nanyang Siang Pau) பத்திரிகை தகவல்வெளிட்டது. மேகாங் (Mekong) வட்டாரத்தில் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான நாகாகார்ப், கடந்த 28 ஆண்டுகளில் கம்போடியாவின் மிகப் பெரிய சூதாட்ட நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவர் பக்கவாதத்திற்கு உள்ளானார். மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரியான டாக்டர்சென் லிப் கியோங் 1998-ஆம் ஆண்டில் தமது நாகாகார்ப் நிறுவனத்தை அமைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!