Latestமலேசியா

சூதாட்ட விவகாரம் அவதூறு பரபரப்பினால் சட்ட நடவடிக்கை -பிரதமர் எச்சரிக்கை

புத்ரா ஜெயா, மே 2 – ஜோகூரிர் Forest city யில் சூதாட்ட விடுதி லைசென்ஸ் திட்டத்திற்கான பேச்சுக்களில் தம்மையும் அரசாங்கத்தையும் தொடர்புபடுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் அவசியம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்திருக்கிறார். இத்தகைய நபர்கள் அரசியலில் மூலதனம் இல்லாதவர்கள் என அவர் வருணித்தார். Forest City யில் சூதாட்ட விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim தம்மிடம் எந்த வேளையிலும் தெரிவிக்கவில்லையென அன்வார் கூறினார்.

அங்கு சூதாட்ட விடுதியை கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து பேரரசர் தம்மிடம் தெரிவித்ததும் இல்லை. அப்படியிருக்கும்போது எங்கேயிருந்து இந்த தகவல் கிடைத்தது என அன்வார் வினவினார். அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறைகூறலை ஏற்றுக்கொண்டாலும் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர்கள் அரச அமைப்பை குறைகூறக்கூடாது என அன்வார் தெரிவித்தார். அரச அமைப்பு என்பது உயரிய மாண்பையும் புனிதத்தையும் கொண்டதாகும். அரசியலமைப்பு சட்டத்திலும் அரச அமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே நமது ஆட்சியாளர் அமைப்பை அரசியல்வாதிகள்போல் குறைகூறிக்கொண்டிருக்கக்கூடாது என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!