Latestஉலகம்

சூரியனை விட 33 மடங்கு பெரிதான கருந்துளை ; வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

பாரிஸ், ஏப்ரல் 17 – விண் வெளியில், இதுவரை இள்ளாத அளவுக்கு மிகப்பெரிய நட்சத்திர கருந்துளையை வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த கருந்துளை, சூரியனை காட்டிலுல் 33 மடங்கு பெரிதானது என கூறப்படுகிறது.

கருந்துளை என்பது, விண்வெளியில் புவி ஈர்ப்பு மிகவும் வலுவாக இருக்கும் ஒரு பகுதியாகும். அதில், ஒளி கூட ஊடுருவி வெளியேற முடியாது.

கருந்துளைகளுக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரங்கள், மற்ற நட்சத்திரங்களில் இருந்து எவ்வாறு மாறுபட்டு வித்தியாசமாக செயல்படுகின்றன என்பதை தனித்துவமான கருவிகள் வாயிலாக மனிதர்கள் காணலாம்.

Gaia BH3 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கருந்துளை, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான Gaia-வால் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து “தற்செயலாக” கண்டுபிடிக்கப்பட்டது. பூமியில் இருந்து, சுமார் ஈராயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில், அது அமைந்துள்ளது.

கயாவின் (Gaia) தொலைநோக்கியை கொண்டு வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் துல்லியமான நிலையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால், அதன் உதவியோடு, வானியலாளர்கள் BH3 கருந்துளையின் சுற்றுப்பாதைகளையும், அதன் தன்மைகளையும் அளவிட்டு வருகின்றனர்.

விண் வெளியில், இதற்கு முன் அடையாளம் காணப்பட்ட கருந்துளைகளை காட்டிலும், BH3 கருந்துளை அதிக நிறை கொண்ட கருந்துளை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!