Latestமலேசியா

செயற்கை சுவாசிக்கும் கருவி செயல் இழப்பு தொடர்பான சம்பவங்களை கோலாலம்பூர் பொது மருத்துவமனை ஆராயும்

கோலாலம்பூர், ஜன 29 – வென்டிலேட்டர் எனப்படும்  செயற்கை சுவாசிக்கும் கருவி செயல் இழப்பு  தொடர்புடைய சம்பவங்களை கோலாலம்பூர் பொது மருத்துவமனை ஆராய்ந்து வருகிறது. நோயாளிகள் தரமான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து உபகரணங்களும் கண்காணிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்று கோலாலம்பூர் பொது மருத்துவமனையின்   இயக்குநர்  Dr ரோகனா ஜோஹன் தெரிவித்திருக்கிறார். நோயாளிகளின் சிகிச்சையில் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சனிக்கிழமை ஊடகங்களில் வெளியான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதையும்  அவர்  உறுதிப்படுத்தினார். கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு  மருத்துவமனையில் ஒரு வாரத்திற்குள் இரண்டு சம்பவங்களில் ஒரு நோயாளி இறந்தார், மற்றொருவர் மூளைச்சாவு அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் செயலிழந்ததே இறப்புக்கு காரணம் என்று  தகவல்கள் கூறின.

முதல் சம்பவத்தில் வென்டிலேட்டரின் செயலிழப்பைத் தொடர்ந்து மயக்கமடைந்த நோயாளியை மருத்துவப் பணியாளர்கள் உயிர்ப்பிக்கத் தவறியதாக கூறப்பட்டது. இரண்டாவது சம்பவத்தில், ஒரு நோயாளி 15 நிமிடங்கள் சுயநினைவின்றி இருந்ததைக் கண்டறிந்த பிறகு மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நோயாளியின் தொண்டையில் இருந்து மீன் எலும்பைக் கண்டறிந்து பிரித்தெடுக்கும் முயற்சியில் நோயாளி பொது மயக்க மருந்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு மேல் மூளை ஆக்ஸிஜனை மறுப்பது நோயாளியின் மரணம் அல்லது மூளை இறப்புக்கு வழிவகுக்கும்.வெண்டிலேட்டர் செயலிழந்த மற்ற இரண்டு சம்பவங்களில் இருதயம் செயல்படுவதற்கு  (CPR) புத்துயிர் ஊட்டப்பட்டதைத்  தொடர்ந்து  ஒரு நோயாளி வெற்றிகரமாக உயிர் பிழைத்தார்.  மற்றவரின் நிலை தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!