Latestஉலகம்

செயற்கை நுண்ணறிவை கொண்டு சொந்தமாக இயங்கும் Uber Eats ‘டெலிவரி’ சேவை ; ஜப்பானில் அறிமுகம் காண்கிறது

தோக்கியோ, பிப்ரவரி 23 – ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Uber Eats எனும் சுய டெலிவரி ரோபோ சேவை அறிமுகம் காண்கிறது.

ஜப்பானின், Mitsubishi Electric, Cartken நிறுவனங்களுடன் இணைந்து Uber நிறுவனம் அச்சேவையை தொடங்கவுள்ளது.

தலைநகர் தோக்கியோவில், குறிப்பிட்ட சில பகுதிகளில், அடுத்த மாதம் முதல் அந்த சேவை அறிமுகம் காணவுள்ள வேளை ; அதன் பின்னர் கட்டங் கட்டமாக இதர பகுதிகளுக்கு அது விரிவுப்படுத்தப்படும்.

அமெரிக்காவை அடுத்து Uber Eats சேவை அறிமுகம் காணும் இரண்டாவது நாடாக ஜப்பான் திகழ்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு, தொலைதூரத்திலிருந்து கண்காணிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலை அந்த சேவை உள்ளடக்கியுள்ளது.

அதனால், ஒவ்வொரு முறையும் சுமார் 20 கிலோகிராம் எடையிலான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் ஆற்றலை கொண்ட அந்த ரோபோக்கள், மணிக்கு 5.4 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் என்பதால், பாதுகாப்பானவை என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!