கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – செர்டாங்கில் உள்ள இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து மருத்துவ உதவியாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 14 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பாட்டர்.
நேற்று கைது செய்யப்பட்ட அந்த பெண், நாளை வரை இரண்டு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நீருபிக்கப்பட்டால், அத்துமீறலுக்கான தண்டனையாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 5000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதேவேளையில், பொது ஊழியராக ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் கைது செய்யப்பட்ட அந்த பெண், முன்னதாக மருத்துவமனையின் சிகிச்சை அறைக்குள் நுழைந்து, அங்குச் சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்கு உதவ முன்வந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணிடமிருந்து மருத்துவமனையின் உபகரணங்கள் மற்றும் அடையாளக்கார்டு (lanyard) ஆகியவை காவல்துறை கைப்பற்றியதாக மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் கமருல் வான் அஸ்ரான் உறுதிப்படுத்தினார்.