Latestஉலகம்

சேலையில், வெறுங்காலுடன் 1,600 மீட்டர் ஓடி அசத்திய ஜார்கண்டு பெண்; இணையவாசிகள் பாராட்டு

ராஞ்சி, அக்டோபர்-11 – இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசாங்க வேலையைப் பெறுவதற்காகச் சேலை அணிந்து, வெறுங்காலுடன் 1,600 மீட்டர் தூரம் ஓடிய பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவிதா குமாரி என்ற அந்தப் பெண், ஊர்க்காவல் படையில் வேலை பெறுவதற்கான உடற்தகுதித் தேர்வுக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட ஓட்டப் பயிற்சியில் பங்கேற்றார்.

ஓட்டப்பந்தயத்திற்கான காலணிகளோ, முறையான விளையாட்டு உடைகளோ இல்லாத நிலையில், சேலை அணிந்தபடியே அவர் ஓடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

என்றாலும், பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிட நேர வரம்புக்குள், 1,600 மீட்டர் தூரத்தை அவர் வெற்றிகரமாகக் கடந்து அசத்தினார்… அதுவும் ஆறே நிமிடங்களில்…

கணவரை இழந்த கவிதா குமாரி, தனது இரண்டு பிள்ளைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகச் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

தனது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது இலட்சியமாகும்.

இந்நிலையில், அவரது ஓட்டத்தைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரும் அவரை ‘Super Woman’ எனப் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!