Latestமலேசியா

சையின் ராயன்னின் தம்பி சமூக நலத் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளான்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்-14, கடந்தாண்டு படுகொலையான சிறுவன் சையின் ராயன் அப்துல் மத்தினின் (Zayn Rayyan Abdul Matin) தம்பி தற்போது சிலாங்கூர் சமூக நலத் துறையின் (JKM) பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

அவனை அங்கு வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக மாநில JKM தலைவர் அஸ்மிர் காசிம் (Azmir Kassim) கூறினார்.

Puncak Bestari-யில் உள்ள Zayn-னின் பெற்றோர் வீட்டில் இருந்து 5 வயது அச்சிறுவன் முன்னதாக மருத்துவனைக்கும் பரிசோதனைக்காகக் கொண்டுச் செல்லப்பட்டான்.

அதன் முடிவுகள் கிடைத்தப் பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை முடிவாகும் என்றார் அவர்.

Zayn-னின் தாயும் தந்தையும் அவனது மரணம் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

எனினும், ஆட்டிசம் குறைபாடு உடைய தங்களது மகனின் உடல் அளவில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இருவரும் மறுத்தனர்.

டாமான்சாரா டாமாய் சுற்று வட்டாரத்தில் கடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நண்பகல் முதல் மறுநாள் இரவு 9.55 மணிக்கு இடைபட்ட நேரத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!