Latestமலேசியா

சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்த மிர்ஷானுக்கு அடுத்து மொக்ஸானிக்கும் 30 நாள் கால அவகாசம்

கோலாலம்பூர், பிப் 21 – Mirzan னுக்கு அடுத்து Mokhzani மகாதீருக்கும் சொத்துக்களின் விவரங்களை MACC யிடம் பிரகடனப்படுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 30 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்
MoKhzaniகும் இந்த கால அவகாச நீட்டிப்புக்கான அனுமதியை MACC வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mokhzani கேட்டுக்கொண்டற்கு ஏற்ப மேலும் கூடுதலாக 30 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக MACC யின் தலைவர் Tan Sri Azam Baki தெரிவித்திருக்கிறார். மகாதீரின் இரண்டு புதல்வர்களுமே சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்துவதற்கு மேலும் 30 நாள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

Mokhzani க்கான கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைவதாக இருந்ததால் அதனை நீட்டிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக Azam baki கூறினார். முதல் முறையாக டாக்டர் மகாதீர் பதவியேற்ற 1981ஆம் ஆண்டிலிருந்து சொத்துகளின் விவரங்களை MACC கேட்டுள்ளதால் இதன் விவரங்களை தெரிவிப்பதற்கு தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அந்த இரண்டு சகோதரர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!