Latestஉலகம்

ஜப்பானில் 2 நாட்களில் கொல்லக்கூடிய அரிய “சதை உண்ணும் பாக்டீரியா” கண்டறியப்பட்டது

தோக்யோ , ஜூன் 16 -ஜப்பானில் கோவிட் காலக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு, 48 மணி நேரத்திற்குள் மக்களைக் கொல்லக்கூடிய அரிய சதை உண்ணும் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ரெப்டோகாக்கால் நச்சு அதிர்ச்சி (streptococcal toxic shock syndrome ) நோய்க்குறியின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதியுடன் 977 ஆக எட்டியது. கடந்த ஆண்டு அந்த பக்டீரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 941ஆக பதிவாகியது. கடந்த ஆண்டு பதிவான கிருமிகளின் எண்ணிக்கையைவிட இவ்வாண்டு இது அதிகரித்திருப்பதாக அந்த கிருமிகளை கவனித்துவரும் ஜப்பானிய தேசிய தொற்று நோய்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Group A Streptococcus) பொதுவாக “ஸ்ட்ரெப் (strep) தொண்டை” என்று அழைக்கப்படும் கிருமி குழந்தைகளின் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தி வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் சில வகையான பாக்டீரியாக்கள் மூட்டு வலி மற்றும் வீக்கம், காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகளை விரைவாக உருவாக்குகிறது. இதனால் சுவாசப் பிரச்சனைகள், உடல் உறுப்பு செயல் இழப்பு போன்றவை ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்துகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படுவதாக தொக்யோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று கிருமிகளுக்கான பேராசிரியர் கென் கிக்குச்சி ( Ken Kikuchi ) தெரிவித்திருக்கிறார். நோயாளிகளுக்கு காலையில் அவர்களின் பாதங்களில் வீக்கம் காணப்பட்டவுடன் பிற்பகலுக்கு கால் முட்டிக் பகுதிக்கு விரிவடைந்து 48 மணி நேரத்த்திற்குள் மரணத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இதர நாடுகளிலும் அண்மைய காலமாக இந்த நோய்க்கிருமி பரவியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் குறைந்தது ஐந்து ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய்க் கிருமி பரவியதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!