Latestமலேசியா

ஜாகிமின் ஹலால் சான்றிதழை வைத்திருக்கும் ‘பேக்கரிகள்’; கேக் மீது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என எழுத அனுமதி

கோலாலம்பூர், டிசம்பர் 18 – ஹலால் சான்றிதழை வைத்திருக்கும் “பேக்கரிகள்”, வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் கேக்குகளில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை எழுத அனுமதி வழங்கப்படுவதாக, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறையான ஜாகிம் தனது முகநூல் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

அவ்விவகாரம் தொடர்பான பிரச்சனை, 2020 டிசம்பர் 25-ஆம் தேதியும், இவ்வாண்டு நவம்பர் முதலாம் தேதியும் முன் வைக்கப்பட்ட வேளை ; அந்த விஷயத்தில் ஜாக்கிம் ஒரு நிலையான நிலைபாட்டை கடைபிடித்து வருவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஏதேனும் நிச்சயமற்ற சந்தேகங்கள் எழுந்தால், அதனை பெற்றிருப்பவர்கள் ஜாகிம் அல்லது மாநில இஸ்லாமிய துறைகளான ஜாயின் அல்லது மையின்னை தொடர்புக் கொள்ளலாம் எனவும் அது தெரிவித்தது.

டிசம்பர் 14-ஆம் தேதி, பேக்கரி ஒன்று வெளியிட்ட உள் குறிப்பேடு வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஜாக்கிம் அவ்வாறு கூறியுள்ளது.

ஜாகிமின் விதிமுறைகளுக்கு ஏற்ப, கேக்குகளில் “மெர்ரி கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்துமஸ்” என குறிப்பிட வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக “சீசன்ஸ் க்ரீட்டிங்ஸ்” என குறிப்பேடுமாறு அவர் உள் குறிப்பேடு பணியாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எனினும், உள் பயன்பாட்டிற்காக மட்டுமே வெளியிடப்பட்ட அந்த குறிப்பேட்டை பணியாளர் ஒருவர், விவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளரிடம் காட்டியதை தொடர்ந்து, அது வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!