Latestமலேசியா

“ஜாக்கிம் உத்தரவுக்கு ஏற்ப கேக்குள் மீது கிறிதுமஸ் வாழ்த்துகள் இடம்பெறாது”; கேக் கடை நிர்வாகியின் நடவடிக்கையால் சர்ச்சை

கோலாலம்பூர், டிச 17 – ஜக்கிம் ‘Jakim’ எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் உத்தரவை பின்பற்றாமல் கேக்குகள் மீது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் இடம்பெறச் செய்தால் தங்களது Halal சான்றிதழை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனும் காரணத்தினால் அவ்வாறு வசனங்களை கேக்குகளில் இடம் பெற செய்ய வேண்டாம் என தமது ஊழியர்களுக்கு உத்தரவு போட்ட பெர்ரி கேக் தயாரிப்பு நிறுனத்தின் நிர்வாகி டேனியல் தியோயின் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

எங்களின் ஹலால் சான்றிதழுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதனை கருத்திற்கொண்டே வேறு வழியின்றி ஜக்கிம் உத்தரவை பிற்பற்றியதாகவும் ஆனால் தற்போது தாங்கள் இனவாதி என சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த சர்ச்சைக்கு இடையே தற்போது பயனீட்டாளர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லையென சமய விவகார அமைச்சர் நயிம் மொக்தார் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக தெளிவுபடுத்தும்படி ஜக்கிமை தாம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜக்கிம் வெளியிட்டுள் அறிக்கையின்படி கடையில் காட்சிக்கு வைக்கப்படாத கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எழுதுவதில் தவறு இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கேக் கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேக்குகளில கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கொண்டிருதால் அது தவறாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!