Latestமலேசியா

ஜூலை 15-ஆம் தேதி பின் வருமான வரி வாரியத்திடம் புதிதாக பதிந்து கொண்டவர்கள் ; இ-மடானி உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியாது

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 5 – இவ்வாண்டு ஜூலை 15-ஆம் தேதிக்கு பின்னர், உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம், புதிதாக பதிந்து கொண்டவர்கள், அரசாங்கத்தின் இ-மடானி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

இ-மாடானி உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கு, நிதி அமைச்சு வரையறுத்துள்ள நிபந்தனைகளில் அதுவும் ஒன்று.

ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்கள், அரசாங்கத்தின் இ-மடானி உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம். எனினும், அவர்கள், கடந்த ஜலைக்கு முன்னரே, தங்கள் வருமான வரியை அறிவித்தவர்களாக இருக்க வேண்டும்.

அதோடு, 2023 இ-பெலியா ரஹ்மா உதவித் தொகை கிடைக்காதவர்கள், இந்த இ-மடானி உதவித் தொகையை பெற தகுதியானவர்கள்.

மலேசியர்களிடையே, ரொக்கம் இல்லாத, இ-வாலெட் அல்லது மின்னியல் பணப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த இ-மாடானி உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார்.

இம்மாதம் நான்காம் தேதி தொடங்கி, அடுத்தாப்டி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை, தகுதி பெற்ற மலேசியர்கள் அந்த திட்டத்தின் கீழ் நூறு ரிங்கிட்டை மீட்டுக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!