ஷா ஆலாம், டிசம்பர்-19, சிலாங்கூர், குவாலா லங்காட், ஜெஞ்சாரோமில் உள்ள பேரங்காடியில், பெண்ணின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்று வைரலான ஆடவன், போலீசிடம் சிக்கியுள்ளான்.
வேலையில்லாத 30 வயது அவ்வாடவன், CCTV-யில் பதிவான முகம் தன்னுடையதுதான் என்பதை விசாரணையில் ஒப்புக் கொண்டான்.
அவ்வாறு அநாகரரீகமாக நடந்துகொண்டது இது தான் முதன் முறையென்றும் அவன் கூறியதாக, குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் அக்மால் ரிசால் ரட்சி (Superintendan Mohd Akmalrizal Radzi) தெரிவித்தார்.
பந்திங்கில் கைதான அந்த உள்ளூர் ஆடவன், விசாரணைக்காக 2 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண் டிசம்பர் 9-ஆம் தேதி போலீசில் புகாரளித்ததை அடுத்து, சந்தேக நபர் தேடப்பட்டு வந்தான்.
அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, அவனைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வந்தது.