Latestமலேசியா

ஜெபாக் சட்டமன்ற தொகுதியை ஜி.பி.எஸ் தற்காத்துக் கொண்டது

பிந்துலு, நவ 5 – சரவா மாநிலத்தில் ஜெபாக் சட்டமன்ற தொகுதியை காபுங்கான் பார்ட்டி சரவாக் ‘Gabungan Parti Sarawak’ எனப்படும் ஜி.பி.எஸ் கூட்டணி தற்காத்துக் கொண்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த மாநில தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்கு பெரும்பான்மை வாக்குகள் வேறுபாட்டில் ஜி.பி.எஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஜி.பி.எஸ் கூட்டணியின் வேட்பாளரான இஸ்கண்டார் துர்க்கீ 9,638 வாக்குகளைப் பெற்றார். அவர் 8,784 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த தொகுதியில் காலஞ்சென்ற டத்தோ தாலீப் ஸுல்பிலீப் 4, 243 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

நேற்று நடைபெற்ற ஜெபாக் சட்டமன்ற இடைத் தேர்தலில் இதர இரண்டு வேட்பாளர்களான பார்ட்டி பூமி கென்யாலாங்கைச் ‘Parti Bumi Kenyalang’ சேர்ந்த ஸ்டீவன்சன் ஜோசப் சும்பாங், 854 வாக்குகளையும், சரவாக் மக்கள் ஆஸ்ப்பிரஷன் ‘Aspiration’ கட்சியைச் சேர்ந்த செய்ங் லீ பிங் 431 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவில் தெரிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தாலீப் காலமானதை தொடர்ந்து ஜெபாக் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!