Latestமலேசியா

ஜெம்போலில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு விஷம் குடித்த கணவர்

ஜெம்போல், ஆக 11 – மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அவரை கத்தியால் குத்திவிட்டு கணவர் விஷம் குடித்தார். நேற்று காலை மணி 10 அளவில் பாஹாவ்விலுள்ள (Bahau) வீட்டில் இச்சம்பவம் நடத்ததாக Jempol மாவட்ட போலிஸ் தலைவர் Superintenden Hoo Chang Hook தெரிவித்தார். 30 வயதுடைய அந்த பெண்ணின் இடது புற விலா எலும்பில் அவரது கணவர் இருமுறை கத்தியால் குத்தியுள்ளார். அந்த பெண் இன்னமும் கோலாப்பிலா Tuanku Ampuan Najihah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Hoo வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடமிருந்து இச்சம்பவம் குறித்து போலீசார் புகாரை பெற்றுள்ளனர். இதனிடையே நேற்று நண்பகல் மணி 2.30 அளவில் ஜெலுபுவிலுள்ள தனது டுரியான் தோட்டத்தில் அந்த ஆடவர் களைக்கொல்லி மருந்தை குடித்ததைத் தொடர்ந்து ஜெம்போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான ஆயுதத்தினால் காயம் விளைவித்தது தொடர்பில் அந்த பெண்ணின் கணவருக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!