Latestமலேசியா

ஜோகூரில் டிஜிட்டல் நாணய முதலீட்டுத் திட்ட மோசடியில் ஒன்றரை லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த முன்னாள் ஆசிரியை

பத்து பஹாட், ஜூலை-10, ஜோகூர் பத்து பஹாட்டில் இல்லாத ஒரு டிஜிட்டல் நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 150,000 ரிங்கிட்டை பறிகொடுத்து ஏமாந்துப் போயுள்ளார் ஓய்வுப் பெற்ற ஆசிரியை ஒருவர்.

பன்மடங்கு இலாபம் பார்க்கலாம் எனக் கூறி Telegram-மில் வந்த விளம்பரத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட 56 வயது அம்மாது, அப்போது அறிமுகமான நபருடன் Whatsapp-பில் பேச்சைத் தொடர்ந்தார்.

Whatsapp-பில் கொடுக்கப்பட்ட link-கை தட்டி அதில் சுயவிவரங்களையும் பதிவேற்றியுள்ளார்.

பின்னர் மார்ச் 29 முதல் ஜூலை 6 வரைக்குமான காலக்கட்டத்தில் 34 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டங்கட்டமாக 156,850 ரிங்கிட் வரையில் அவர் போட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது முதலீட்டு கணக்கில் வட்டிப் பணம் போடப்பட்டிருப்பதை கண்டு மகிழ்ச்சியோடு அதனை வெளியாக்கவும் முயன்றார்.

ஆனால், whatsapp-பில் அறிமுகமான ஏஜன்ட் ஏதேதோ சொல்லி மழுப்பியிருக்கிறார்;

தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அம்மாது யொங் பெங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் அது விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!