பத்து பஹாட், ஜூன் 10 – தனது மனைவியை வெட்டி கொலை செய்யப் போவதாக மிரட்டிய, தொழிற்சாலை மேலாளர் ஒருவருக்கு, ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்காயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
30 வயது முஹமட் ஹைருல் அஜிஜி ஒத்மான் (Mohamad Hairul Azizi Othman) தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இம்மாதம் ஐந்தாம் தேதி, இரவு மணி 11.30 வாக்கில், பாரிட் ராஜாவிலுள்ள, வீடொன்றில், தமது தூக்கத்தை கெடுத்த மனைவியை, வெட்டி கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
அதனால், அவ்வாடவரின் 30 வயது மனைவி செய்த போலீஸ் புகாரை அடுத்து, குற்றவியல் சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.