Latestஉலகம்

ஆஸ்திரேலியாவில் Bondy கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் சந்தேகப் பேர்வழிகள் தனியாளகவே செயல்பட்டுள்ளனர்

சிட்னி, டிச 30 – ஆஸ்திரேலியாவில் சிட்னி Bondy கடற்கரையில் தந்தையும் அவரது மகனும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலை அவர்கள் தனியாளகவே மேற்கொண்டுள்ளனர்.

அந்த இருவரும் பரவலான பயங்கரவாதக் குழுவின் ஒரு பகுதியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆஸ்திரேலிய கூட்டரசு போலீஸ்துறை ஆணையர் கிறிஸ் ஸி பாரெட் ( Krissy Barrett ) தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 14 ஆம் தேதியன்று யூத பெருநாளை குறிவைத்து ஐ.எஸ்ஸினால் ஈர்க்கப்பட்ட தாக்குதலில் Sajid Akramமும் அவரது மகன் Naveedத்தும் 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் தென் பிலிப்பைஸ்ஸிற்கு பயணம் செய்ததால் கிளர்ச்சிகளின் பின்னணியைக் கொண்ட ஒரு வட்டாரத்தில் தீவிரவாதிகளை அவர்கள் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகங்களைத் தூண்டியது.

இதுவரை இது உண்மையாகத் தெரியவில்லை. இந்த நபர்கள் தனியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது என்று Barrett செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் குற்றவாளிகள் ஒரு பரந்த பயங்கரவாதக் குழுவின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் அல்லது தாக்குதலை நடத்த மற்றவர்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென அவர் தெரிவித்தார்.

இந்த ஜோடி டாவோ ( Davao) நகரத்திற்கு ஏன் பயணம் செய்தது என்பதை போலீசார் தொடர்ந்து விசாரிப்பார்கள் என்று Barret கூறினார்.

அங்கு அவர்கள் தங்கள் பட்ஜெட் ஹோட்டலை விட்டு வெளியேறாமல் இருந்தது சிசிடிவியில் காட்டப்பட்டது.

அதே வேளையில் அவர்கள் சுற்றுலாவுக்காக அங்கு வந்ததாக தம் கூறவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இருவரும் பல மாதங்களாக தாக்குதலை நுணுக்கமாகத் திட்டமிட்டதாக போலீசார் நம்புகிறார்கள், மேலும் ஆஸ்திரேலிய கிராமப்புறங்களில் துப்பாக்கிகளுடன் பயிற்சி பெறுவதைக் காட்டும் படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!