Latestமலேசியா

ஜோகூர் நீர்நிலையில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட 3 வெளிநாட்டு கப்பல்கள் தடுத்து வைப்பு

கோத்த திங்கி, டிச 5- கிழக்கு ஜோகூரில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக பார்படாஸ்  மற்றும் கோபன்ஹேகன், இருந்து வந்த கப்பல்கள் உட்பட மொத்தம் மூன்று கப்பல்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், எம்.எம்.ஈ.ஏ தடுத்து வைத்துள்ளது.

நேற்று திங்கள்கிழமை காலை 11:30 மணியளவில், முதல் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக இயக்குநர் கடல்சார் ஆணையர் முகமது நஜிப் சாம் தெரிவித்தார்.

போர்ட் கிள்ளானில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் இங்கு தஞ்சோங் செடிலி கெச்சில் கிழக்கே 19.8 கடல் மைல் (36.6 கிமீ) தொலைவில் நங்கூடமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறிது நேரத்திற்கு பிறகு,  பார்படாஸ்  உள்ள  பிரிட்ஜ்டவுன் என்று பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது சரக்குக் கப்பலை தஞ்சங் பெனாவார் வடகிழக்கில் 18.1 கடல் மைல் (33.5 கிமீ) தொலைவில் நங்கூரமிட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதே நாளில் மாலை 5:30 மணியளவில் ரோந்துப் பணியின் போது, மூன்றாவது கப்பல்  தஞ்சங் பெனாவார் இருந்து கிழக்கே 21.5 கடல் மைல் (39.8 கிமீ) தொலைவில் அனுமதியின்றி நங்கூரபிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.

அந்தக் கப்பல்களின் கேப்டன்கள் அனைவரும் மலேசியக் கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்குத் தேவையான ஆவணங்களைத் தரத் தவறிவிட்டனர். இதனால், வணிகக் கப்பல் கட்டளைச் சட்டம் 1952 இன் பிரிவு 491பி (1)(L) இன் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுவர் என்று நஜிப் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!