Latestமலேசியா

ஜோகூர் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வணக்கம் மலேசியாவுக்கு வருகை

கோலாலம்பூர், நவ 7 – ஜோகூர், பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 40 பேர் அண்மையில் வணக்கம் மலேசியா ஒளிபரப்பு அரங்கிற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.

செய்தி சேகரிப்பு, தொகுப்பு,படைப்பு மற்றும் ஒளிபரப்பு ஆகிய பணி முறை குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.மலேசியாவின் முதன்மை இலக்கவியல் தமிழ் செய்தி ஊடகமான வணக்கம் மலேசியாவின் தொடக்கம், வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட திட்டங்கள் பற்றியும் நேர்க்காணல் தொடர்பான செய்த்திறன் பயிற்சியையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார் வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி.

அதே சமயத்தில் மாணவர்களுக்கு செய்தி தொடர்பான பல்வேறு தகவல்களை கொடுத்ததோடு, செய்தி வாசிப்புத் தொடர்பான செய்த்திறன் பயிற்சியையும் வழங்கினார் வணக்கம் மலேசியாவின் செய்தி பிரிவின் பொறுப்பாசிரியர் வேதகுமாரி வெங்கடேசன்.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பயிற்சிகள் அனைத்தும் மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்ததாக பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தலைமயாசிரியை திருமதி திலகவதி தெரிவித்தார்.

செய்திகள் மற்றும் நேர்க்காணல் போன்றவறை எடுக்கும்போது கேமராவுக்கு பின்னால் பலர் பங்காற்றுவதையும் நேரடியாக மாணவர்கள் அறிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

ஒரு தகவலை மக்களுக்கு இணையத்தள ஊடகம் எவ்வளவு விரைவாகவும், விளக்கமாகவும் எப்படி கொண்டுச் சேர்க்க முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு வணக்கம் மலேசியாவுக்கான அவர்களது வருகை பெரும் பயனாக இருந்தாக பாசீர் கூடாங் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் பாலு தெரிவித்தார்.

இந்த கல்விச் சுற்றுலாவில் அதுவும் வணக்கம் மலேசியா ஒளிபரப்பு அறைக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு பல புதுமையான அனுபவங்கள் கிடைத்தது என்பது மறுக்க முடியாத ஒன்று என மாணவர்களுடன் இந்த சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிர் சங்கத்தின் துணைத்தலைவர் அவின் தெரிவித்தார்.

சாதாரண செய்தி அறிக்கையை வாசிக்கின்றனர் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில் நிபுணத்துவம் , ஒழுங்கு மற்றும் நேர்த்தி போன்றவை பணியின்போது கடைப்பிடிக்கிறது என்பதை நேரடியாக மாணவர்களுக்கு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டதாக அவர் மகிச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த கல்விச் சுற்றுலாவின்போது, வணக்கம் மலேசியா மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியது. அதே சமயத்தில் ரிவோன் நிறுவனமும் அவர்களின் சார்பாக அன்பளிப்புகளை வழங்கியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல், வணக்கம் மலேசியாவின் கோரிக்கைக்கு ஏற்ப ‘Chicken Rice’ துரித உணவகம் மாணவர்களுக்கு மதிய உணவை ஏற்படு செய்து கொடுத்தது.

நாட்டின் முன்னணி தமிழ் இலக்கவியல் ஊடகமாக வலம் வரும் வணக்கம் மலேசியா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏற்கனவே 11 ஆண்டுகளாக மாணவர் முழக்கம் சொற்போர் போட்டியை நடத்தி வருகிறது.

வெற்றி பெறும் மாணவர்கள் அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதில் எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கும் வணக்கம் மலேசியா, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெளியுலக அனுபவத்தை பரவலாக்கும் இது போன்ற கல்விச் சுற்றுலாக்களை வரவேற்பதாக அதன் இயக்குனர் தியாகராஜன் தெரிவித்தார்.

அந்த வகையில் ஊடக துறையில் பல்வேறு விளங்கங்களை தெரிந்துகொள்ள விரும்பிய ஜோகூர் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வணக்கம் மலேசியாவிற்கான அவர்களது வருகை நல்லதொரு பயனை தந்துள்ளது என்ற திருப்தியோடு இல்லம் திரும்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!