Latestமலேசியா

ஜோர்ஜ் டவுனில் போலி முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு , 25 பேர் 5 மில்லியன் ரிங்கிட் இழந்தனர்

ஜோர்ஜ் டவுன் , ஜூலை 23 -போலி முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்த 25 பேர் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் இழந்தனர். இந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி அதில் பணத்தை முதலீடு செய்தவர்கள் மோசடிக்கு உள்ளாகியதாக இத்திட்டத்தில் 2018ஆம் ஆண்டு முதலீடு செய்ததில் 40,000 ரிங்கிட் இழந்ததாக ருஷியான்ஷன் இப்ராஹிம் (Ruzianzan Ibrahim ) என்ற வர்த்தகர் தெரிவித்தார். முதல் ஆறு மாதங்களில் மாதந்தோறும் 1,000 ரிங்கிட் தனக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து தனக்கு நம்பிக்கை வந்தததால் மேலும் 30,000 ரிங்கிட் முதலீடு செய்து ஏமாந்ததாக அவர் கூறினார். அதன்பிறகு எனக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. தனக்கு 6,000 ரிங்கிட் மட்டுமே கிடைத்ததாக பாதிக்கப்பட்டவர்களுடன் Bayan Lepas போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபின் Ruzianzan தெரிவித்தார்.

தனது வீட்டை பழுதுபார்த்த குத்தகையாளர் ஒருவர் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 45,000 ரிங்கிட் முதலீடு செய்து ஏமாந்ததாக குடும்ப மாதான 54 வயதுடைய சரிஜா நாகோர் (Shahrija Nagore ) கூறினார். இறந்த தனது கணவரின் 45,000 ரிங்கிட் பணத்தை தாம் முதலீடு செய்து ஏமாந்ததாக அவர் வேதனையோடு தெரிவித்தார். அந்த நேரத்தில் வேலையில்லாமல் இருந்ததால் இந்த முதலீட்டு திட்டத்தில் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது அவர்களுக்கு ஆதரவாக MHO எனப்படும் அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் பொதுச்செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிமும் (Datuk Hishamuddin Hashim) உடனிருந்தார். மலேசியா முழுவதிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் சுமார் 20 மில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதுவரை 90 பேர் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!