Latestமலேசியா

டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, ஜாக்லின் விக்டர், பெய் யோக் – CUCKOO நிறுவனத்தின் புதிய தூதர்கள்

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – ஆரோக்கியமான வீடுகளை உருவாக்கும் CUCKOO நிறுவனம், அதன் புதிய தூதர்களை கடந்த 29 ஆம் திகதி மார்ச் அன்று அறிமுகப்படுத்தியது.

MyCreative Ventures கீழ் இயக்கும் RIUH தளத்துடன் CUCKOO நிறுவனமும் இணைந்து #SAMASAMA RAYA எனும் ‘tagline’-யில் 3 நாட்களுக்கான ரமலான் சந்தை ஒன்றை ஏற்பாடுச் செய்தது.

அதில், மலேசியாவின் பிரபலமான பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹலிசா தாருடின், ஆசிய தேவதை எனும் மலேசியாவின் புகழ் பெற்ற பாடகி ஜாக்லின் விக்டர் மற்றும் சமூக வலைத்தளத்தின் வழி பலரின் மனம் கவர்ந்த பெய் யோக் ஆகியோரை புதிய தூதர்களாக CUCKOO அறிவித்தது.

மலேசியர்களுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த, புதிய தூதர்களின் வருகை துணைபுரியும் என CUCKOO நம்பிக்கை தெரிவித்திருந்தது.

இதனிடையே ஏற்பாடுச் செய்திருந்த ரமலான் சந்தையில் #SAMASAMABuatBaik எனும் நோக்கில் ‘Kamu Like, CUCKOO Derma’ என்றும் ‘Kamu Derma, CUCKOO Salurkan’ என்ற இரண்டு புதிய முயற்சிகளையும் அது விளம்பரப்படுத்தியது.

பெருநாள் காலத்தில் மலேசியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்பதை நினைவுறுத்தும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CUCKOO நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்த இந்த ரமலான் சந்தையில் RM1.111 பில்லியன் வருவாயை பெற்று, தொடர்ச்சியாக 4-காவது ஆண்டாக RM 1 பில்லியனை அந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!