Latestமலேசியா

டாக்டர் அம்பேத்கர் அனைத்துலக மாநாடும், 133ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஷா ஆலம், ஏப்ரல் 15 – ஐந்தாவது அனைத்துலக அம்பேத்கர் மாநாடும் அம்பேத்கரின் 133 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் நேற்று ஐ.டி.சி மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டதுடன் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டதோடு பல சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் இடையில் கல்வி ஒன்றே சிறந்த ஆயுதம் என இந்தியாவில் சாதனையைப் படைத்த டாக்டர் அம்பேத்கருக்குப் புகழாரம் சுட்டிய பிரதமர், இந்திய நாடாளுமன்றத்தில் அவர் நடத்திய போராட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்னாரின் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இவ்விழாவில் பிரதமரை சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக அம்பேத்கர் விருது, அம்பேத்கர் பேரன் பீமா ராவால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இவ்வேளையில், இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, பென்ணுரிமை காவலர் அம்பேத்கரை கோடி காட்டி உரையாற்றினார்.

மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அறுவருக்கு விருது வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களில் சிலர் தங்களின் மகிழ்வான தருணங்களை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர். டாக்டர் அம்பேத்கரின் பேரன் பீமா ராவ் அம்பேத்கர் உட்பட இந்திய, அமெரிக்க, இந்தோனேசிய எனப் பல நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களுடன் 1000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!