Latestஉலகம்

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது ; ஒருவர் பலி, 6 பேர் காயம்

புது டெல்லி, ஜூன் 28 – டெல்லி விமான நிலையத்திலுள்ள, டெர்மினல் 1 முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி, இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். ஆறு பேர் காயமடைந்தனர்.

இன்று காலை பெய்த,
பலத்த காற்றுடன் கூடிய அடை மழையைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அந்த கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

அச்சம்பவத்தை தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் டெர்மினல் 1 முனையத்தின் அனைத்து சேவைகளும், பின்னர் அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய பொது விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடும், உதவிகளும் வழங்கப்படுமென அந்நாட்டு பொது விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயிடு கிஞ்சராபு தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!