
டோக்கியோ, ஆக. 28 – டோக்கியோ (Tokyo) அருகேயுள்ள நரிட்டா (Narita) விமான நிலையத்தில் விமானங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு விமான நிறுவனங்களில் இதுபோன்ற ரோபோவை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஸ்வீடனைச் சேர்ந்த Aerowash AB உருவாக்கிய AW3 ரோபோ, தொலைவில் இருந்து இயக்கப்படும் நீளக்கூடிய கையைப் பயன்படுத்தி விமானங்களைச் சுத்தம் செய்யும். தேவையான பயிற்சிகள் முடிந்ததும், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்.
இதன் மூலம் ஒரு விமானத்தைச் சுத்தம் செய்யும் பணிநேரம் 40 விழுக்காடு வரை குறையுமென JAL தெரிவித்துள்ளது. உயரத்தில் பணியாற்றுதல் மற்றும் ரசாயனங்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளும் குறையும்.
ஆரம்பத்தில் நரிட்டா விமான நிலையத்தில் ஒரு ரோபோ பயன்படுத்தப்படும். பின்னர் மற்ற விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.



