
தங்காக், அக்டோபர் -10,
நேற்று காலை, ஜலான் சியாலாங் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் பயணித்த ஆறு வயது மகள் சொற்ப காயங்களோடு உயிர் தப்பினார்.
லேசான காயங்களோடு உயிர் தப்பிய அச்சிறுமி தற்போது தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாயும் மகளும் மோட்டாரில் பயணித்து கொண்டிருக்கும் போது, கார் ஒன்று அவர்களை இலேசாக மோதியதென்றும், அதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் சறுக்கி விழுந்தது என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி Superintendan ரொஸ்லான் முகமட் தாலிப் (Roslan Mohd Talib) கூறினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் சாலையில் கீழே விழுந்து, நெஞ்சு மற்றும் தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இவ்விபத்துக்கு தொடர்பான விசாரணை தொடர்வதாகவும், இது சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரொஸ்லான் கூறினார்.