Latestஉலகம்

ஈரான் மீது தொடர்ந்து 7-வது இரவாக அமெரிக்கா தாக்குதல்; “எந்த எல்லைக்கும் பாதுகாப்பு இல்லை” என ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், ஜூலை-18 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில்,
அமெரிக்க இராணுவம் வெள்ளிக்கிழமை இரவு ஏழாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரானின் இராணுவ ஆற்றல்களைக் குறைப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என வாஷிங்டன் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த மோதல், தற்போது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் தனது எல்லைகளைத் தாண்டி முழுவீச்சிலான தாக்குதலை முன்னெடுக்கும்; இனி எந்த அரசியல் எல்லைக்கும் பாதுகாப்பு இருக்காது” என ஈரானின் மூத்த இராணுவ ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

​இந்த மோதல் குவைத், கட்டார், ஓமான் மற்றும் பஹ்ரேய்ன் எனப் பல நாடுகளுக்குப் பரவியுள்ளது.

ஈரானின் தாக்குதலால் குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், அமெரிக்கத் தாக்குதலால் ஈரானின் மின்சக்தி நிலையங்களும் கடும் அழுத்தத்தைச் சந்தித்துள்ளன.

​குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஏற்கத்தக்கதல்ல என ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கவலைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!