Latestஉலகம்

தண்ணீர் உள்ள மற்றொரு கிரகம்! ; கண்டிபிடித்துள்ளது நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி

வாஷிங்டன், ஜனவரி 30 – பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, கிரகம் ஒன்றில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக, நாசா கூறியுள்ளது.

பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான Exoplanet GJ 9827d எனும் அந்த கிரகத்தில், நீரின் மூலக்கூறுகள் இருப்பதை, நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

எனினும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் சிறிய அளவில் நீர் உள்ளதா? அல்லது அது பெரும்பாலும் தண்ணீரால் ஆன கிரகமா என்பதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பகுப்பாய்வின் வழியாக தீர்மானிக்க முடியவில்லை.

நீர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. எனினும், 800 டிகிரி பாரன்ஹூட் அல்லது 427 பாகை செல்சியல் வரையில் அதீத வெப்பநிலை காரணமாக நீர் எளிதில் நீராவியாகிவிடும் சூழல் இருக்கும், Exoplanet GJ 9827d கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

அதனால், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தின் உண்மையான தன்மையை வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் தன்மையை அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு ஒரு தொடக்க புள்ளியாக கருதப்படுகிறது.

Exoplanet GJ 9827d கிரகம் தொடர்பான கண்டுபிடிப்புகள், அண்மையில் வெளியிடப்பட்ட தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸில் (The Astrophysical Journal Letters) அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!