Latestமலேசியா

தந்தையின் 4 சக்கர வாகனத்தில் மோதிய 20 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்

ஜெர்த்தே , மே 30 – தந்தை ஒருவர் தனது நான்கு சக்கர வாகனத்தை வீட்டின் முற்றத்திலிருந்து வெளியே எடுத்தபோது 20 மாத ஆண் குழந்தையின் மீது மோதியதால் அக்குழந்தை உயிரிழந்தது. இந்த பரிதாப சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் ஜெர்த்தேவுக்கு அருகிலுள்ள கம்போங் ராஜாவிலுள்ள
Kampung Wakaf kubor ரில் நிகழ்ந்தது. அக்குழந்தையின் தந்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது நான்கு சக்கர வாகனத்தை கழுவியபின் அதனை வீட்டிற்கு வெளியே நிறுத்திவைப்பதற்காக நகர்த்தியுள்ளார்.

அப்போது அவ்வீட்டின் படிக்கட்டில் கைதொலைபேசியுடன் விளையாடிக் கொண்டிருந்த அக்குழந்தை திடீரென வெளியேறியதை உணராமல் அவர் வாகனத்தை எடுத்தபோது அக்குழந்தையின் மீது வாகனம் மோதியது. உடடினயாக அருகேயுள்ள Gong Medang சுகாதார கிளினிக்கிற்கு அக்குழந்தையை கொண்டுச் சென்றபோதிலும் காலை 10.30 மணியளவில் அக்குழந்தை இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாக Besut மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடன்ட் Abdul Rozak Muhammad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31 ஆவது விதியின் உட்பிரிவு (1) மற்றும் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின்
41ஆவது விதி உட்பிரிவு (1இன் ) கீழ் அக்குழந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!