
தேனி, அக்டோபர்-28,தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து, சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு, கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதுபோல் நாடகமாடி, அவருக்கு உதவ வந்த 3 சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, அந்த 17 கைதிகளும் தப்பியோடியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மூன்று சிறைக் காவலர்கள் காயமடைந்த நிலையில், தப்பிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ட்ரோன்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், இதுவரை 13 கைதிகள் மீண்டும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 4 கைதிகளைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாக 9 சிறை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.கவும் பாஜகவும் கடுமையாக விமர்சித்துள்ளன.



