Latestமலேசியா

தலைநகர் ‘மினி டாக்காவில்’ மீண்டும் சோதனை ; வணிக வளாகங்களுக்கு சீல், வர்த்தகர்களுக்கு அபாராதம் விதித்து DBKL அதிரடி

கோலாலம்பூர், ஜனவரி 5 – தலைநகரில், “Mini Dhaka” என அழைக்கப்படும் Jalan Silang-கில், நேற்று மாலை மீண்டும் DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனால், இம்முறை  மஸ்ஜித் இந்தியா மற்றும் ஜாலான் பெட்டாலிங் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டன.

அப்பகுதிகளில், விதிமுறைகளை மீறிய வர்த்தக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அந்நிய நாட்டவர்களுக்கும், உள்நாட்டு வியாபாரிகளுக்கும் அபராத பதிவுகள் வெளியிடப்பட்டன.

குறிப்பாக, 110 வர்த்தக வளாகங்களில் நடவடிக்கைகள், அங்காடி வியாபாரிகள், நடைபாதை தடைகள், வெளிநாட்டு வியாபாரிகள் அல்லது உதவியாளர்கள், அனுமதி இன்றி செயல்படும் அங்காடி கடைகள், போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், சட்டவிரோத விளம்பரங்கள், அந்நிய மொழிகளில் எழுதப்படிருந்த அறிவிப்பு பலகைகள், அசுத்தமாக காணப்பட்ட இடங்கள் உட்பட பல்வேறு குற்றங்களை அந்த சோதனை உட்படுத்தி இருந்தது.

அதில், பொது இடங்களில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 29 வர்த்தக வளாகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

அதே சமயம், அனுமதி இன்றி அல்லது வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட 20 வர்த்தக வளாகங்களின் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

பல்வேறு குற்றங்களை புரிந்த வியாபாரிகளுக்கு எதிராக 54 அபராத பதிவுகளும் வெளியிடப்பட்டன.

இவ்வேளையில், ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 12 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 45 வாகனங்களுக்கு அபராதங்களையும் DBKL வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!