
பட்டவொர்த், ஏப்ரல்-9, பினாங்கு, பட்டவொர்த் வெளிவட்ட சாலையில் எதிர் திசையில் பள்ளி வேனை ஓட்டிச் சென்ற 70 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் நிகழ்ந்த அச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஜாலான் பாகான் லாலாங்கிலிருந்து ஜாலான் ராஜா ஊடா செல்லும் வழியில், சாலை சந்திப்பை நெருங்கிய போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னையறியாமலேயே எதிர் திசையில் புகுந்து விட்டார்.
கடைசியில் சுங்கை டுவா, கம்போங் தெலுக்கில் ரோந்து போலீஸார் அவரைக் கைதுச் செய்தனர்.
எனினும் அவரின் செயலால் விபத்தோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
சம்பவத்தின் போது பள்ளி வேனில் மாணவர்கள் எவரும் இல்லை.